எம்.ஆர்.பி-யை விட அதிக விலை - சரவணா செல்வரத்தினம் கடைக்கு நீதிமன்றம் அபராதம்
பொருட்களை அதிக விலைக்கு விற்ற மதுரை சரவணா செல்வரத்தினம் கடைக்கு நீதிமன்றம் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது.
மதுரையில் சமீபத்தில் புதிதாக சரவணா செல்வரத்தினம் ஸ்டோர் தொடங்கப்பட்டது. அந்த கடைக்கு வழக்கறிஞர் சுப்பிரமணியம் என்பவர் சமீபத்தில் சென்றுள்ளார். அங்கு தனது குழந்தைக்காக ஒரு பொம்மையை வாங்கியுள்ளார். அதில், எம்.ஆர்.பி-யை விட மேலாக ரூ.62 அதிகமாக விலை குறிப்பிட்டு ஸ்டிக்கர் ஒட்டப்பட்டிருந்தது.
இதுபற்றி அவர் கடை நிர்வாகியிடம் கேட்டதற்கு, அவரை மரியாதை இல்லாமல் பேசியதோடு, செக்யூரிட்டையை அழைத்து அவரை வெளியே தள்ளியுள்ளனர். இதனால், ஆத்திரமடைந்த சுப்பிரமணியன், இதுபற்றி நுகர்வோர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் வழக்கு செலவு மற்றும் கூடுதலாக விலை வைத்ததற்கு அபராதமாக மொத்தம் ரூ.73 ஆயிரத்தை சரவணா செல்வரத்தினம் செலுத்த வேண்டும் என உத்தரவிட்டது.