திங்கள், 27 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By
Last Updated : திங்கள், 27 நவம்பர் 2017 (21:39 IST)

139 பேருக்கு மரண தண்டனை, 146 பேருக்கு ஆயுள் தண்டனை: வங்காளதேசத்தில் பரபரப்பு!!

வங்காளதேசத்தில் 139 பேருக்கு மரண தண்டனையும், 146 பேருக்கு ஆயுள் தண்டனையும் உறுதிபடுத்தப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வங்காளதேசம் நாட்டில் கடந்த 2009 ஆம் ஆண்டு அந்நாட்டு ஆயுத படை வீர்ர்கள் பில்கானா பகுதியில் உள்ள தலைமை அலுவலகத்தில் கலகத்தில் ஈடுபட்டனர். 
 
இதனால் ஏற்பட்ட மோதலில் ராணுவ உயர் அதிகாரிகள் 57 பேர் உள்பட 74 பேர் கொள்ளப்பட்டன். பின்னர் அரசு நடத்திய சமரச பேச்சுவார்த்தையால் ஆயுத படை வீரர்கள் சரணடைந்தனர்.
 
இந்த தாக்குதலுக்கு பிறகு கொலை, கொள்ளை, பொது சொத்தை சூறையாடுதல், அரசுக்கு எதிரான கலகம் விளைவித்தல் என பல்வேறு குற்றப்பிரிவுகளில் வழக்குகள் பதிவு செய்யப்பட்டன.
 
இந்த வழக்குகளை விசாரித்த நீதிமன்றம் 152 பேருக்கு மரண தண்டனையும், 423 பேருக்கு ஆயுள் உள்ளிட்ட சிறை தண்டனையும் விதித்து 2013 ஆம் ஆண்டு தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீடு செய்யப்பட்டத்தில் 139 பேருக்கு விதிக்கப்பட்ட மரண தண்டனையும் 146 பேரின் ஆயுள் தண்டனையையும் உறுதிப்படுத்தி தீர்ப்பளித்தது.