1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 23 மே 2023 (08:10 IST)

கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் திடீர் போராட்டம்: என்ன காரணம்?

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நள்ளிரவில் பயணிகள் திடீரென போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 
 
சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து தமிழ்நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் அண்டை மாநிலங்களுக்கும் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. 
 
இந்த நிலையில் நேற்று நள்ளிரவு தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் நீண்ட நேரமாக இயக்கப்படவில்லை என  பயணிகள் குற்றம் சாட்டினர். இதனை அடுத்து கோயம்பேட்டில் இருந்த பயணிகள் திடீரென போராட்டம் செய்ததால் பேருந்துகள், நிலையத்திலிருந்து வெளியே செல்ல முடியாமல் சிக்கலில் இருந்தது. 
 
இது குறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் உடனடியாக போராட்டம் நடத்திய பயணிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். தென் மாவட்டங்களுக்கு செல்லும் பேருந்துகள் இயக்குவதற்கு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி கூறப்பட்டதை அடுத்து போராட்டக்காரர்கள் கலைந்து சென்றனர். இதனால் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் சில மணி நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
 
 
Edited by Siva