வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 27 ஜூன் 2023 (13:44 IST)

நடுவானில் விமானத்தில் சிறுநீர் மற்றும் மலம் கழித்த பயணி கைது!

Flight
விமானம் சென்று கொண்டிருக்கும்போது, நடுவானில் பயணி ஒருவர் மலம் மற்றும் சிறுநீர் கழித்ததாக கூறிய புகாரில் கைது செய்யப்பட்டுள்ளார்.

டெல்லியை நோக்கி கடந்த 24 ஆம் தேதி ஏஐசி 866 என்ற ஏர் இந்திய விமானம் மும்பையில் இருந்து டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தது.

அந்த விமானம் நடுவானில் சென்று  கொண்டிருக்கும்போது, 17எஃப் –ல் இருந்த பயணி ராம்ன் சிங் விமானத்தில் 9 வது வரிசையில் அமர்ந்திருக்கும்போது இயற்கை  உபாதைகளைக் கழித்தார்.  இது சக பயணிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்திய நிலையில், அவர் மீது புகார் அளித்தனர்.

இந்த செயலுக்காக அவர் மீது எச்சரிக்கை விடுக்கப்பட்ட  நிலையில், விமானியின் கமாண்டிற்கும் தகவல் கூறப்பட்டது.

இதையடுத்து, பயணி ராம் சிங் மீது இந்திய தண்டனை சட்டம் 294 மற்றும் 510 ஆகியவற்றைன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரைக் கைது செய்தனர்.

இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.