1. செய்திகள்
  2. செய்திகள்
  3. உலகச் செய்திகள்
Written By Sinoj
Last Updated : திங்கள், 26 ஜூன் 2023 (21:40 IST)

உலகில் அதிகம் மாசுபட்ட நகரங்களில் இந்த நகரம் தான் முதலிடம்! இந்தியாவில் 4 நகரங்கள்

pollution
உலகில் அதிகம்  மாசுபட்ட நகரங்களின் பட்டியலில் காத்மண்டு முதலிடம் பிடித்துள்ளது.

World Of statistics என்ற  நிறுவனம் உலகின்  உள்ள சம்பவங்கள், நிறுவனங்கள், அரசியல் தலைவர்கள், அரசியல் கட்சிகள், நாட்டின் ஜிடிபி ஆகியவற்றைப் பற்றிய புள்ளிவிவரங்களை ஆய்வு செய்து வெளியிட்டு வருகின்றது.

அதன்படி, இன்று அந்த நிறுவனம் உலகின் மிக மாசுபட்ட நகரங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது.

அதன்படி,  நேபாள  நாட்டின் காத்மாண்டு முதலிடத்திலும், டெடொவோ 2 வது இடத்திலும், ஃபரிதாபாத் 3 வது இடத்திலும், உலான்பாட்டர் 4 வது இடத்திலும், பெய்ருட் 5 வது இடத்திலும், சான் பெர்னார்டோ 6 வது இடத்திலும், தாகா 7 வது  இடத்திலும்,   நொய்டா  8 வது இடத்திலும்,  ஹோ சி மின் சிட்டி 9 வது இடத்திலும், ஹாசியாபாத் 10 வது இடத்திலும், டெல்லி 14 வது இடத்திலும் உள்ளன.

இந்தியாவின் நொய்டா மற்றும் டெல்லி 8 மற்றும் 10 வது இடத்திலும் டெல்லி 14 வது இடத்திலும் மும்பை 31 வது இடத்திலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.