அரசுப் பேருந்தின் பாகங்கள் சாலையில் விழுந்ததால் பரபரப்
மதுரை மாட்டுத்தாவணி அருகே சென்ற அரசுப் பேருந்தின் பாகங்கள் சாலையில் விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மதுரை மாவட்டம் மாட்டுத்தாவனி அருகே சென்று கொண்டிருந்த ஒரு அரசுப்பேருந்தின் கதவுப் பக்கவாட்டிலிருந்த இரும்புச் சட்டப்பகுதி பேருந்தில் இருந்து கழன்று சாலையில் விழுந்தது.
இப்பேருந்துகள் முறையாகப் பராமரிப்பதில்லை என்ற புகார் எழுந்த நிலையில், இன்று பூ மார்க்கட்டில் சென்றபோது, ( டிஎன் 58, 14 81 )மாட்டுத்தாவனி பேருந்தில் இருந்து இப்படி பேருந்து பாகங்கள் சாலையில் விழுந்து விபத்து ஏற்படும் அபாயத்தை ஏற்படுத்தியதால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சமீபத்தில் உத்தரப்பிரதேசத்தில் ஒரு பேருந்து ஒன்றில் படிக்கட்டு இல்லாமல் வைரலான நிலையில், தற்போது தமிழகத்தில் உள்ள ஒரு பேருந்தின் பாகங்கள் கீழே விழுந்துள்ளது, பேருந்தை முறையாகப் பராமரிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.