வியாழன், 14 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: செவ்வாய், 6 செப்டம்பர் 2022 (10:31 IST)

மதுரை மல்லி கிலோ 3000 ரூபாய் – பூவே வாங்க முடியாது போலயே!!

மதுரை மல்லி கிலோ 3000 ரூபாய் மழையால் ஒரு வாரமாக உச்சத்தில் இருக்கும் பூக்கள் விலை.  


தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர்மழை காரணமாக மதுரை மாட்டுத்தாவணி மலர் சந்தையில் பூக்கள் விலை ஒரு வாரமாக தொடர்ந்து உச்சத்தில் நீடித்து வருகிறது.  இயல்பாக 300 முதல் 600 ரூபாய் வரை விற்பனையாகும் மல்லிகைப்பூ விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு 1500 முதல் 1800 ரூபாய் வரை விலை உயர்ந்து  விற்பனையானது.

அதனை தொடர்ந்து மதுரை மற்றும் தென் மாவட்டங்களில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக பூக்களின் வரத்து குறைந்தது இதனால் ஒரு வாரமாக விலை உயர்வு நீடித்து வருகிறது  மேலும் தொடர்ந்து மூன்று நாட்கள் முகூர்த்த நாள் என்பதால் மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய், 50 ரூபாய்க்கு விற்பனையாகும்.

சம்மங்கி இன்று 250 ரூபாய், 300 ரூபாய்க்கு விற்பனையாகும் பிச்சி, முல்லை 1500 ரூபாய்க்கும். 50 ரூபாய்க்கு விற்கும் பட்டன் ரோஸ் 250 ரூபாய்க்கும்   விற்கப்படுகிறது. இதனால் வியாபாரம் மந்தமாக காணப்படுகிறது என்று வியாபாரிகள் தெரிவித்தனர்.