வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 31 ஆகஸ்ட் 2022 (11:30 IST)

விநாயகர் ஊர்வலம்; ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு தடை? – நீதிமன்றம் விதித்த நிபந்தனைகள்!

Ganesha statue
இன்று விநாயகர் சதுர்த்திக்காக பல பகுதிகளிலும் விநாயகர் சிலைகள் வைக்கப்படும் நிலையில் பின்பற்ற வேண்டிய நிபந்தனைகள் குறித்து மதுரை கிளை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இன்று இந்தியா முழுவதும் விநாயகர் சதுர்த்தி கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. நாடெங்கும் பல பொது இடங்கள், கோவில்கள், தெருக்களில் பெரிய பெரிய அளவில், வித்தியாச வித்தியாசமான விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் விநாயகர் சதுர்த்தி வழிபாடு மற்றும் ஊர்வலத்திற்கு மதுரை உயர்நீதிமன்ற கிளை நிபந்தனைகளை விதித்துள்ளது.

அதன்படி, ஆடல் பாடல் நிகழ்ச்சி நடத்தலாம். ஆனால் அதில் ஆபாச நடனமோ அல்லது அநாகரிகமான, இரட்டை அர்த்த வசங்களோ இருக்கக் கூடாது.

குறிப்பிட்ட அரசியல் கட்சி, மதம், சமூகம் அல்லது சாதியை போற்றும் விதத்தில் பாடல்களோ, நடனமோ இருக்கக் கூடாது.

எந்த அரசியல் கட்சி அல்லது மத அமைப்புகள் பெயரிலுமோ அல்லது எதிராகவோ ப்ளெக்ஸ் பேனர் போர்டுகள் வைக்ககூடாது.

விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் பங்கேற்பவர்கள் குட்கா, மதுபானங்கள் உள்ளிட்ட போதைப்பொருட்களை உட்கொள்ளக்கூடாது என நிபந்தனைகளில் தெரிவிக்கப்பட்டுள்ளது.