திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: வியாழன், 23 நவம்பர் 2017 (09:58 IST)

அன்புவிடம் பணம் வாங்கினேன் ; வீட்டை விற்றேன் - பார்த்தீபன் ஓப்பன் டாக்

சசிகுமாரின் உறவினர் அசோக்குமார் கந்துவட்டி கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட விவகாரத்தில் பைனான்சியர் அன்புச்செழியனுக்கு எதிராக தமிழ் சினிமா உலகினர் குரல் கொடுத்து வருகின்றனர்.


 
இந்நிலையில் நடிகர் பார்த்தீபன் தனது பேஸ்புக் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளதாவது:
 
நான் சினிமா பைனானசியர் பல பேர்கிட்ட வட்டிக்கு பணம் வாங்கியிருக்கேன். அதில்  அன்பும் ஒருவர். வாங்குன பணத்தை ஒத்துகிட்ட வட்டியோட சொன்ன தேதியில கொடுக்க, நான் முதன்முதலா வாங்குன பங்களாவைக் கூட வித்திருக்கேன். ஆனா யார்கிட்டயும் தலை குனிஞ்சி நின்னதில்ல. 
 
அந்த திமிர் என்னைப் பிடிச்சிருக்கு. எனக்கும் பிடிச்சிருக்கு.நாலு படத்தில நடிச்சி கடனை அடைச்சிட்டு மறுபடியும் படமெடுப்பேன் அதுதான் எனக்கேற்பட்ட இடைவெளி.நான் ஆதங்கப்பட்டு குரல் கொடுக்கிறது சக நண்பர்களின் பிரச்சனைகளுக்கு. மத்தபடி நான் சந்திக்கிற பிரச்சனைகளை சவாலாதான் எதிர்கொள்றேன்.
 
20 லட்ச ரூபாய் கடனுக்காக வளசரவாக்கத்தில் இருந்த 74 லட்சம் மதிப்புள்ள வீட்டை விற்றேன். தற்போது அதன் மதிப்பு 74 கோடி” என அவர் குறிப்பிட்டுள்ளார்.