1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 27 செப்டம்பர் 2022 (09:04 IST)

பகுதி நேர ஆசிரியர்கள் ஓய்வு வயது 60: அமலுக்கு வந்த உத்தரவு!

teachers
தமிழகத்தில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என சமீபத்தில் பள்ளி கல்வித்துறை அறிவித்து நிலையில் அந்த உத்தரவு தற்போது அமலுக்கு வந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நீடிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டு வந்த நிலையில் இந்த கோரிக்கை குறித்து பரிசீலனை செய்த பள்ளி கல்வித்துறை பகுதிநேர ஆசிரியர்கள் 60 வயதில் ஓய்வு பெறுவார்கள் என சமீபத்தில் அறிவித்தது. 
 
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 60 ஆக நிர்ணயிக்கப்பட்டு நிலையில் பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 ஆக நியமிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித் துறை அறிவித்திருந்தது 
 
இதுவரை பகுதி நேர ஓய்வு பகுதிநேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 58 ஆக இருந்த நிலையில் தற்போது பகுதி நேர ஆசிரியர்களின் ஓய்வு வயது 60 என அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.