வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: புதன், 7 செப்டம்பர் 2022 (10:59 IST)

2 கோடி வாக்காளர் அட்டை ஆதாருடன் இணைப்பு! – தமிழக தேர்தல் அதிகாரி தகவல்!

வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி தொடங்கி நடைபெற்று வருகிறது.

இந்தியா முழுவதும் கடந்த பல ஆண்டுகளாக வங்கி கணக்கு உள்ளிட்ட பல சேவைகளுக்காக ஆதார் எண்ணை இணைத்தல் அவசியமாக இருந்து வருகிறது. இந்நிலையில் தற்போது வாக்காளர் அடையாள அட்டையுடனும் ஆதார் எண்ணை இணைக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

இதற்கான படிவங்கள் நேரடியாக மக்களிடம் விநியோகிக்கப்பட்டு வருகிறது. நேற்று தமிழகத்தின் பல பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களாக செயல்படும் பள்ளிகளில் ஆதார் இணைப்பு முகாம் நடைபெற்றது. இதில் மக்கள் பலரும் வந்து தங்கள் வாக்காளர் அடையாள அட்டையை ஆதார் எண்ணுடன் இணைத்துள்ளனர்.

இதுவரை தமிழகம் முழுவதும் 2 கோடி வாக்காளர் அடையாள அட்டை ஆதார் எண்ணுடன் இணைக்கப்பட்டுள்ளதாக தமிழக தேர்தல் அதிகாரி சத்யப்ரதா சாகு தெரிவித்துள்ளார். இந்த ஆதார் இணைக்கும் பணி அடுத்த ஆண்டு மார்ச் 31ம் தேதியுடன் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது.