ஞாயிறு, 24 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: திங்கள், 25 பிப்ரவரி 2019 (08:21 IST)

தேர்தல் கூட்டணி: கமல் கட்சிக்கும் கிடைத்துவிட்டது ஒரு கூட்டணி கட்சி!

வரும் நாடாளுமன்ற தேர்தலை சந்திக்க திமுக, அதிமுக ஆகிய இரு கட்சிகளும் பிற கட்சிகளை கூட்டணியில் வளைத்து போடும் தீவிர பணியில் இருந்து வருகிறது. இதுவரை அதிமுக கூட்டணியில் பாமக, பாஜகவும், திமுக கூட்டணியில் காங்கிரஸ் கட்சியும் அதிகாரபூர்வமாக இணைந்துள்ளது. தேமுதிக, மதிமுக, விசிக உள்பட இன்னும் ஒருசில கட்சிகள் விரைவில் கூட்டணியில் இணையும் என் எதிர்பார்க்கப்படுகிறது
 
இந்த நிலையில் இரு திராவிட கட்சிகளிலும் சேராமல் தனித்து போட்டியி டமுடிவு செய்த கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியுடன் கூட்டணி வைக்க பாரிவேந்தரின்  இந்திய ஜனநாயக கட்சி ஆலோசனை செய்து வருகிறது. கமல்ஹாசனும் பாரிவேந்தரும் நேற்று சென்னை கிண்டியில் உள்ள ஒரு நட்சத்திர ஓட்டலில் சந்தித்து கூட்டணி குறித்த பேச்சுவார்த்தை நடத்தியதாக செய்திகள் வெளிவந்துள்ளது. சுமார் அரை மணி நேரம் நடந்த இந்த சந்திப்பில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டதாக தெரிகிறது.
 
பாரிவேந்தரை அடுத்து மேலும் ஒருசில கட்சிகள் கமல்ஹாசனின் கட்சியுடன் கூட்டணி வைக்க தயாராக இருப்பதாகவும் இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்றும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் வட்டாரங்கள் கூறுகின்றன