புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 9 ஜனவரி 2019 (19:46 IST)

பிளாஸ்டிக் தடையால் மதுபாட்டிலில் டீ வாங்கும் முதியவர்

பிளாஸ்டிக் பொருட்களுக்கு கடந்த 1ஆம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான கடைகளில் கேரிபேக் முதல் பல பிளாஸ்டிக் பொருட்கள் தற்போது பயன்படுத்துவதில்லை.

மேலும் பெரும்பாலான டீக்கடைகளில் பார்சல் டீ வாங்க பாத்திரம் கொண்டு வரும் வாடிக்கையாளர்களை பார்க்க முடிகிறது. இந்த நிலையில் பாத்திரம் இல்லாமல் பார்சல் டீ வாங்க வந்த ஒருவருக்கு மதுபாட்டிலில் டீ ஊற்றி கொடுக்கும் காட்சி ஒன்று சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக பரவி வருகிறது.

இந்த வீடியோ எங்கு எடுக்கப்பட்டது என்பது தெரியவில்லை. ஆனால் டீக்கடைக்காரர் லாவகமாக மது பாட்டிலில் டீ ஊற்றி கொடுக்க அதை ஒரு முதியவர் மிகுந்த சந்தோஷத்துடன் வாங்கி செல்கிறார்.