செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 18 ஜூன் 2020 (16:10 IST)

கூட்ட நெரிசல்: பரனூரில் சுங்க கட்டணம் ரத்து!

பரனூர் சுங்கச்சாவடியில் சுங்க கட்டணம் தற்காலிகமாக ரத்து என .பி கண்ணன் உத்தரவு. 
 
சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மற்றும் திருவள்ளூர் ஆகிய 4 மாவட்டங்களில் கொரோனா தொற்று அதிகம் இருப்பதை அடுத்து இந்த நான்கு மாவட்டங்களிலும் ஜூன் 19 ஆம் தேதி முதல் அதாவது நாளை 30 ஆம் தேதி வரை முழு ஊரடங்கு உத்தரவு அமல்படுத்தப்படும்.  
 
இந்த முழு ஊரடங்கில் கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என ஏற்கனவே தெரிவித்திருந்த நிலையில் தற்போது சென்னையில் இன்று நள்ளிரவு முதல் யாரும் வாகனங்களில் வெளியே வரகூடாது என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 
 
எனவே பிழைப்பு தேடி சென்னை வந்தவர்கள் மீண்டும் சொந்த மாவட்டங்களுக்கு வீடு தேடி புறப்பட்டு வருகின்ரனர். இதனால் பரனூர் சுங்கச்சாவடியில் போக்குவரத்து அதிகரித்துள்ளது. சுமார் 2 கி.மீ தூரத்திற்கு நீண்ட வரிசையில் வாகனங்கள் நிற்பதால் சுங்கச்சாவடியில் சுங்கக் கட்டண வசூல் தற்காலிகமாக நிறுத்தி வைக்க முடிவு.