1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Paramakudi poluce arrested a psycho killer

வயல்வேலை செய்த பெண் கொலை; பின்னணியில் சைக்கோ கொலைகாரன்! – பரமக்குடியில் அதிர்ச்சி!

Paramakudi
பரமக்குடியில் வயலில் வேலை பார்த்து வந்த பெண் கொல்லப்பட்ட சம்பவத்தின் பின்னணியில் சைக்கோ கொலைகாரன் இருப்பது தெரிய வந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

பரமகுடியில் உள்ள எட்டிவயல் கிராமத்தை சேர்ந்தவர் வேலு. இவரது மனைவி தெய்வானை கடந்த ஆண்டு வயல் வேலைக்காக சென்றவர் திரும்பவில்லை. இதுகுறித்து அக்கம்பக்கத்தினர் அனைத்து பகுதிகளிலும் தெய்வானையை தேடி வந்த நிலையில் வயலில் வாய்க்காலில் தலை மூழ்கிய நிலையில் தெய்வானை இறந்து கிடந்துள்ளார்.

இதுகுறித்து போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வந்துள்ளனர். எனினும் இந்த வழக்கை சிபிசிஐடிக்கு மாற்ற வேண்டும் என தெய்வானையின் உறவினர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்ததால், போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர். அதில் வயலுக்கு வேலைக்கு சென்ற தெய்வானையை கொன்றது தீயனூர் காலனியை சேர்ந்த டிரைவர் ரவி என்பது தெரிய வந்துள்ளது.

இதுதொடர்பாக ரவியை கைது செய்து போலீஸார் விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் தெரிய வந்துள்ளது. லாரி டிரைவரான ரவி தினம்தோறும் மது அருந்துபவர். மது அருந்தினாலே போதை தலைக்கேறி கண்ணில் தென்படும் பெண்களை பாலியல் பலாத்காரம் செய்வதும், மறுத்தால் கொல்வதுமாக இருந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதற்கு முன்னாலும் குடிபோதையில் பலரை கெடுத்து கொன்றிருப்பதாகவும் விசாரணையில் தெரிய வந்ததாக வெளியாகியுள்ள தகவல்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

மது அருந்தினால் பெண்களை கொல்லும் சைக்கோ கொலைகாரன் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அடுத்த கட்டுரையில்
காஷ்மீர் வரைபடத்தை காட்டி இந்தியாவை கோபப்படுத்திய பாகிஸ்தான் தரப்பு