1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : திங்கள், 20 ஜூலை 2020 (06:45 IST)

அதிமுக எம்.எல்.ஏ கணவருக்கு கொரோனா உறுதி: பரபரப்பு தகவல்

அதிமுக எம்.எல்.ஏ கணவருக்கு கொரோனா உறுதி
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் மூன்று திமுக எம்.எல்.ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. கிருஷ்ணகிரி தொகுதி திமுக எம்.எல்.ஏ. செங்குட்டுவன், வேலூர் தொகுதி திமுக எம்.எல்.ஏ கார்த்திகேயன் மற்றும் ராணிப்பேட்டை திமுக எம்.எல்.ஏ ஆர்.காந்தி ஆகிய மூவருக்கும் நேற்று கொரோனா பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து அவர்கள் மூவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.
 
இந்த நிலையில் தற்போது அதிமுக எம்.எல்.ஏ ஒருவரின் கணவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யாவின் கணவர் பன்னீர்செல்வத்துக்கு கொரோனா உறுதிசெய்யப்பட்டுள்ளது. இவர் பண்ருட்டி நகர மன்ற தலைவராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
 
பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யாவின் கணவர் பன்னீர்செல்வத்துக்கு கொரோனா உறுதியானதால் அவர் புதுவை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். பன்னீர்செல்வம் அவர்களுக்கு கொரோனா உறுதியானதை அடுத்து  பண்ருட்டி அதிமுக எம்.எல்.ஏ. சத்யா மற்றும் அவரது குடும்பத்தினருக்கும் புதுச்சேரி மருத்துவமனையில் கொரானா பரிசோதனை செய்யப்பட்டுள்ளதாகவும், அவர்களின் முடிவு இன்னும் வெளிவரவில்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது
 
தமிழகத்தில் அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் அவர்களது குடும்பத்தினர் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது