வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : சனி, 18 ஜூலை 2020 (18:11 IST)

மேலும் ஒரு திமுக எம்.எல்.ஏவுக்கு கொரோனா தொற்று உறுதி

இந்தியாவில் கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்து லட்சத்தைத் தாண்டியுள்ளது. தமிழகத்தில் 1 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். கொரோனா தொற்றைத் தடுக்க மத்திய அரசும் மாநில அரசும் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்நிலையில் ஏற்கணவே  கொரோனோசேவை ஆற்றி வந்த திமுக எம்.எம்.எல். ஜே.அன்பழகன்  சமீபத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார்.

இந்நிலையில், மேலும் திமுக எம்.எல்.ஏ கொரொனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார்.

கடலூர் மாவட்டம் திட்டக்குடி தொகுதி திமுக எம்.எல்.ஏ. கணேசனுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

நேற்று அமைச்சர் செல்லூர் ராஜூ கொரோனா தொற்றிலிருந்து பூரண நலம் அடைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழகத்தில் அமைச்சர்கள், எம்.எல்.ஏக்கள் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது.