1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 30 டிசம்பர் 2017 (15:32 IST)

நாங்கள் அசந்த நேரத்தில்தான் தினகரன் வெற்றிப்பெற்றார் - ஓ.பன்னீர்செல்வம்

நாங்கள் அசந்த நேரத்தில் தினகரன் ஆர்.கே.இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்றார். இனி அந்த தவறு நடக்காது என்று துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

 
ஊட்டியில் நடைபெற்ற எம்.ஜி.ஆர். நூற்றாண்டு கலந்துக்கொண்டு பேசிய துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கூறியதாவது:-
 
ஜெயலலிதா அதிமுகவுக்கு துரோகம் செய்த 16 பேரை கட்சியை விட்டு நீக்கினார். சில நேரங்களில் சதி வெல்லும். ஆனால் அது நிரந்தரமல்ல. நாங்கள் அசந்த நேரத்தில் தினகரன் ஆர்.கே.இடைத்தேர்தலில் வெற்றிப்பெற்றார். இனி அந்த தவறு நடக்காது.
 
ஜெயலலிதா இருந்த காலத்திலேயே முதலமைச்சர் ஆகலாம் என சதி திட்டம் தீட்டியவர் தினகரன். அதிமுகவை வீழ்த்த எத்தனை சதித்திட்டம் தீட்டினாலும் அசைக்க முடியாது. தினகரனை கட்சியில் சேர்க்க கூடாது என்பதில் ஜெயலலிதா உறுதியாக இருந்தார். ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்தது டிடிவி தினகரன் தரப்புதான் என்று கூறியுள்ளார்.