செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: வியாழன், 26 செப்டம்பர் 2019 (17:57 IST)

சாலையில் மணல் தேங்குவதை தடுக்க இப்படியெல்லாமா யோசிப்பாங்க..??

தனுஷ்கோடியில் சூறைக்காற்றினால் சாலைகளில் மணல் தேங்குவதை தடுக்க, பனைமட்டைகளால் தடுப்புகள் அமைக்கப்பட்டிருப்பது வேடிக்கையான செயலாக பார்க்கப்படுகிறது.

தனுஷ்கோடியில் சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காக தார்ச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு ஏப்ரல் முதல் டிசம்பர் வரை சூறாவளி காற்று வீசுவதால், மணற்குன்றுகள் கலைந்து சாலைகளில் மணல் குவிகிறது.

எனினும் சாலைகளில் மணல் தேங்குவதால் அடுத்தக்கட்ட முயற்சியாக தனுஷ்கோடியில் நெடுஞ்சாலைத்துறையினர் பனைமட்டைகளால் தடுப்புகளை ஏற்படுத்தியுள்ளனர். இதனை அப்பகுதி மக்கள் பெரும் வேடிக்கையோடு நகைக்கின்றனர்.

மேலும் இது குறித்து நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த ஒருவர் கூறுகையில், பனைமட்ட தடுப்புகள் மூலம் செயற்கையாக மணல் குன்றுகளை உருவாக்கும் இந்த யோசனை கூகுள் இணையத்தளத்தில் கிடைத்ததாக தெரிவித்துள்ளார். சாலைகளின் மணல் தேங்குவதை தடுக்க பனைமட்டைகளால் தடுப்பு ஏற்படுத்தியுள்ள செய்தி, வேடிக்கையான ஒன்றாகவும் நகைப்புக்குறியவையாகவும் பார்க்கப்படுகிறது.