செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : வியாழன், 26 செப்டம்பர் 2019 (13:39 IST)

நவம்பர் மாதம் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும்.. மாநில தேர்தல் ஆணையம்

தமிழகத்தில் நவம்பர் மாதம், உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது.

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாத நிலையில் தற்போது நவம்பர் மாதம் நடைபெறும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனை மாநில தேர்தல் ஆணையம் உறுதி செய்துள்ளது.

இதை தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை தயார் நிலையில் வைக்கும் பணி அக்டோபர் 15ல் முடிவடையும் என்றும் மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.