செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 25 நவம்பர் 2021 (17:34 IST)

பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: காணாமல் போன தரைப்பாலம்!

பாலாற்றில் கரைபுரண்டு ஓடும் வெள்ளம்: காணாமல் போன தரைப்பாலம்!
பாலாற்றில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதை அடுத்து அங்கு கட்டப்பட்டிருந்த தரைப்பாலம் ஒன்று காணாமல் போனதாகவும் இதனால் 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிக்கப்பட்டு உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. 
 
வங்கக் கடலில் தோன்றிய குறைந்த காற்றழுத்த தாழ்வு காரணமாக தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருகிறது என்பதும் இதனால் ஒரு சில பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது 
 
இந்த நிலையில் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பாலாற்றில் திடீரென ஏற்பட்ட வெள்ளம் காரணமாக தரைப்பாலம் ஒன்று அடியோடு இழுத்துச் செல்லப்பட்டது தற்போது அந்த பாலமே காணவில்லை என்று கூறப்படுகிறது 
 
இதன் காரணமாக 50க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு போக்குவரத்து துண்டிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அதனால் அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் கடும் சிரமத்தில் இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன