செவ்வாய், 21 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 22 ஜூலை 2024 (18:02 IST)

பகுஜன் சமாஜ் கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஆம்ஸ்ட்ராங் மனைவி.. பா ரஞ்சித் வாழ்த்து..!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங்  ஆகியோர் தேர்வு செய்யப்பட்டதற்கு இயக்குனர் பா ரஞ்சித் தனது சமூக வலைத்தள பக்கத்தில் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவராக வழக்கறிஞர் திரு.பி. ஆனந்தன் அவர்களையும், மாநில ஒருங்கிணைப்பாளராக திருமதி.பொற்கொடி ஆம்ஸ்ட்ராங் அவர்களையும் தேர்ந்தெடுத்திருப்பதை முழுமனதுடன் வரவேற்று, என் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன்!
 
மறைந்த சமத்துவத் தலைவர் அண்ணன் ஆம்ஸ்ட்ராங் அவர்களின் தன்னலமற்ற கள செயற்பாட்டைப் போல தலித் மக்களின் விடுதலைக்காகவும், உரிமைகளுக்காகவும், சுயமரியாதைக்காகவும் எவ்விதமான சமரசமும் பின்வாங்கலும்  இல்லாமல் சித்தாந்தத் தெளிவுடன் பாபாசாகேப் அம்பேத்கர் கண்ட கனவுகளுக்கு செயல் வடிவம் கொடுக்கவும், தலித் மக்களின் நலனில் அக்கறை கொண்டு களம் காணவும் மனதார வாழ்த்துகிறேன்.     
 
முன்னதாக பகுஜன் சமாஜ் கட்சியின் மாநில தலைவராக பா.ரஞ்சித் தேர்வு செய்ய வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில் ஆனந்தன் என்பவர் தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளார். இருப்பினும் பா ரஞ்சித்துக்கு எந்த விதமான ஏமாற்றமும் இல்லை என்றும் அவர் புதிய நிர்வாகிகளுக்கு முழு ஒத்துழைப்பு தருவார் என்றும் கூறப்பட்டு வருகிறது.
 
Edited by Mahendran