புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : ஞாயிறு, 18 நவம்பர் 2018 (14:07 IST)

அரசை நம்புனா 10 பைசாக்கு கூட பிரயோஜனம் இல்ல: பா.ரஞ்சித் பரபரப்பு பேச்சு

சாதி ஆணவக் கொலைகளை தடுப்பது குறித்து பா.ரஞ்சித் பரபரப்பாக பேசியுள்ளார்.
நாட்டில் தற்பொழுது சாதி ஆணவக் கொலைகள் அதிகரித்துக் கொண்டே போகிறது. உடுமலைப்பேட்டை சங்கர்- கவுசல்யா, தருமபுரி இளவரசன்-திவ்யா, திருச்செங்கோடு கோகுல்ராஜ், தெலிங்கானாவில் பிரணய் - அம்ருதா என பட்டியல் நீண்டுகொண்டே போகிறது.
 
சமீபத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் சாதிமாற்றுத் திருமணம் செய்த நந்தீஷ் - சுவாதி படுகொலை பெரிய பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
இந்நிலையில் இதுகுறித்து பேசிய இயக்குனர் பா.ரஞ்சித் எதிலும் ஜாதி, எதற்கெடுத்தாலும் ஜாதி. இதனைத்தடுக்க அரசையோ, அரசியல்வாதிகளை நம்பியோ 10 பைசாக்கு கூட பிரயோஜனம் இல்லை, ஆடு, மாடுகளுக்கு ஜாதி பார்க்காத மனிதர்கள் ஏன் மனிதர்களுக்கு மட்டும் ஜாதி பார்க்கிறார்கள்.
 
இந்த அவலத்தை தீர்க்க மக்களாகிய நாம் தான் பாடுபடவேண்டும். மக்கள் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான் இந்த சாதிய பாகுபாடுகளும், சாதிய வன்மங்களும், இந்த ஆணவக்கொலைகளும் தீரும் என ரஞ்சித் பேசினார்.