புதன், 4 டிசம்பர் 2024
  1. பொழுதுபோக்கு
  2. சினிமா
  3. சினிமா செய்தி
Written By vinoth
Last Modified: சனி, 6 ஜூலை 2024 (07:47 IST)

ஆம்ஸ்ட்ராங்க் கொலை… மருத்துவமனையில் கதறி அழுத இயக்குனர் பா ரஞ்சித்!

பகுஜன் சமாஜ் கட்சியின் தமிழ்நாடு மாநில தலைவர் ஆம்ஸ்ட்ராங் வெட்டி படுகொலை செய்யப்பட்ட நிலையில், பதற்றம் காரணமாக சென்னை பெரம்பூர், செம்பியம் பகுதியில் உள்ள கடைகள் அடைக்கப்பட்டுள்ளன. நேற்று மாலை தனது வீட்டுக்கு முன்பு அவர் இரு சக்கரவாகனத்தில் வந்த 6 பேர் கொண்ட கும்பல் அவரை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பித்துச் சென்றுள்ளனர்.

இதையடுத்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆம்ஸ்ட்ராங், அங்கு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரின் நெருங்கிய நண்பரும் திரைப்பட இயக்குனருமான பா ரஞ்சித் மருத்துவமனைக்கு வந்து அவர் உயிரிழந்துவிட்ட செய்தியைக் கேள்விப்பட்டு கதறியழுதார். இது சம்மந்தமான வீடியோ துணுக்கு வெளியாகி சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. பா ரஞ்சித் மாணவராக இருந்த போதே ஆம்ஸ்ட்ராங்கோடு நெருக்கமான நட்பில் இருந்தவராம். மேலும் ரஞ்சித்தின் உயர்கல்விக்கு ஆம்ஸ்ட்ராங் உதவிகள் செய்து அவரை நம்பிக்கையூட்டி படிக்க வைத்துள்ளார்.

இதையடுத்து அவர் உடல் உடல் கூறாய்வுக்காக சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளது. பகுஜன் சமாஜ் கட்சியினர் பலரும் சென்னை ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை முன்பு குவிந்துள்ளனர். ஆம்ஸ்ட்ராங்க் கொலை சம்மந்தமாக 8 பேர் தற்போது கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகின்றனர்.