செவ்வாய், 24 செப்டம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : வியாழன், 2 மார்ச் 2017 (19:44 IST)

ஜெ. மர்ம மரணம் ; குற்றவாளியை நெருங்கி விட்டோம் - பி.எச்.பாண்டியன் பேட்டி

ஓ.பி.எஸ் அணியை சேர்ந்த முன்னாள் சபாநாயகர் பி.எச். பாண்டியன், முன்னாள் அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் மற்றும் மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோர் இன்று நண்பகல் செய்தியாளர்களை சந்தித்து, ஜெ.வின் மர்ம மரணம் குறித்து பல்வேறு கேள்விகளை எழுப்பினர். 


 

 
மறைந்த முதல்வர் ஜெயலலிதா போயஸ்கார்டன் வீட்டில் கீழே தள்ளிவிடப்பட்டு அனுமதிக்கப்பட்டதாக, அப்பல்லோ மருத்துவமனையின் டிஸ்சார்ஜ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருப்பதாக பி.எச். பாண்டியன் கூறி பரபரப்பை ஏற்படுத்தினார். 
 
அதேபோல், ஆம்புலன்சுக்கு ஒரு டி.எஸ்.பி தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அவர் யார்? ஜெ. அனுமதிக்கப்பட்டவுடன், அப்பல்லோவில் இருந்த 27 சிசிடிவி கேமராக்கள் அகற்றப்பட்டது ஏன்? அகற்ற சொன்னது யார்? முக்கியமாக, ஜெ.விற்கு மத்திய அரசு அளிக்கப்பட்டிருந்த என்.எஸ்.ஜி பாதுகாவலர்கள் அனுமதி மறுக்கப்பட்டது ஏன்? அவர்களை அங்கிருந்து வெளியேறுமாறு கூறியது யார்? என்பது உள்ளிட பல்வேறு கேள்விகளை அவர் எழுப்பினார். 
 
இந்த ததவலையெல்லாம் நானே சேகரித்தேன். நான் குற்றவியல் படிப்பு படித்த ஒரு பட்டதாரி என பி.எச். பாண்டியன் கூறினார். உடனே செய்தியாளர்கள், அப்படியெனில் குற்றவாளியை கண்டுபிடித்து விட்டீர்களா எனக் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த பாண்டியன் “ குற்றவாளியை நெருங்கி விட்டோம். இப்போது அது பற்றி முழுமையாக கூற முடியாது “ என அவர் கூறினார்.