திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (11:58 IST)

அரசின் பேச்சு அதிகம், செயல்பாடு குறைவு: ப சிதம்பரம் விமர்சனம்!

அரசின் பேச்சு அதிகம், ஆனால் செயல்பாடு குறைவு என மத்திய அரசை முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் அவர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார். கடந்த சில ஆண்டுகளாகவே முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் மத்திய அரசையும் பிரதமர் மோடியையும் கடுமையாக விமர்சனம் செய்து வருகிறார் அந்த வகையில் சிறு குறு விவசாயிகளுக்கு மத்திய அரசு எதுவுமே உதவவில்லை என்று குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:
 
இன்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டுரையில் தமிழ்நாட்டில் மேற்கொண்ட ஆய்வு முடிவுகளின் அடிப்படையில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் எப்படி கடந்த சில ஆண்டுகளில் நசி்ந்து இப்பொழுது குலைந்து விட்டன என்பதை விளக்கியுள்ளேன்
 
50 சதவிகித வேலைகள் காலியாக உள்ளன, அவற்றில் பணியாற்றியவர்கள் வேலை இழந்து தவிக்கிறார்கள். மத்திய அரசு உருப்படியாக எந்த உதவியும் செய்யவில்லை. ECLGS திட்டம் கழுதை தேய்ந்து கட்டெறும்பான கதையாகிவிட்டது குறு, சிறு தொழில்களுக்கு கடன் கொடுத்து அவர்களை மீட்பதற்கு வங்கிகள் தயங்குகிறார்கள். அரசின் பேச்சு அதிகம், செயல்பாடு குறைவு என்பதை இந்த ஆய்வு  தெளிவாகப் புலப்படுத்துகிறது.