வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By siva
Last Updated : திங்கள், 28 ஜூன் 2021 (07:48 IST)

டுவிட்டர் குறைதீர்க்கும் அதிகாரி திடீர் விலகல்: என்ன காரணம்?

கடந்த சில நாட்களுக்கு முன்னர் பதவியேற்ற டுவிட்டர் குறைதீர்க்கும் அதிகாரி திடீரென பதவி விலகி உள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது
 
மத்திய அரசின் புதிய சமூக வலைதள கொள்கையை சமீபத்தில் ஏற்றுக்கொண்ட டுவிட்டர் நிறுவனம் நீதிமன்றத்தின் உத்தரவின்படி டுவிட்டர் பயனாளிகளின் குறைதீர்க்கும் அதிகாரியாக தர்மேந்திரா சத்தூர் என்பவரை நியமனம் செய்தது. இவர் இந்த பதவியில் ஒரு சில நாட்கள் மட்டுமே இருந்த நிலையில் திடீரென தற்போது ராஜினாமா செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன
 
இதனால் தற்போது இந்தியாவில் உள்ள ட்விட்டர் பயனாளிகளின் குறையை கேட்பதற்கு அதிகாரி இல்லாமல் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து டுவிட்டர் நிர்வாகம் இன்னும் ஓரிரு நாள்களில் புதிய நிர்வாகியை நியமனம் செய்யப் போவதாக அறிவித்துள்ளது டுவிட்டர் குறை தீர்க்கும் அதிகாரி திடீரென எந்தவித காரணமும் இன்றி தனது பதவியில் இருந்து விலகி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது