1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 17 மே 2018 (08:04 IST)

நான் எடியூரப்பாவாக இருந்தால்...ப.சிதம்பரம்

கர்நாடக மாநில சட்டசபை தேர்தல் முடிவுகள் எந்த கட்சிக்கும் மெஜாரிட்டி இல்லாமல் வந்துள்ள நிலையில் தனிப்பெரும் கட்சியான 104 தொகுதிகளில் வெற்றி பெற்ற பாரதிய ஜனதா கட்சியின் எடியூரப்பாவை ஆட்சி அமைக்க கர்நாடக கவர்னர் நேற்று அழைப்பு விடுத்தார். 
 
கவர்னரின் இந்த முடிவை அடுத்து நேற்றிரவே உச்சநீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடரப்பட்டது. இரவு 1.45 மணிக்கு இந்த வழக்கின் விசாரணை நடைபெற்றது. இந்த வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் எடியூரப்பா பதவியேற்க தடை விதிக்க முடியாது என்றும், ஆனால் அதே நேரத்தில் இன்று மதியம் 2-00 மணிக்குள் ஆதரவு எம்எல்ஏக்கள் யார் யார் என்று கொடுக்க எடியூரப்பா கொடுக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்து இந்த வழக்கின் விசாரணையை  வரும் 18ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது 
 
இந்த நிலையில் முன்னாள் நிதியமைச்சரும் காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவருமான ப.சிதம்பரம் இதுகுறித்து கருத்து கூறியபோது, 'நான் எடியூரப்பாவாக இருந்தால் உச்சநீதிமன்ற தீர்ப்பு வரும் வரை பதவியேற்க மாட்டேன்' என்று கூறியுள்ளார். ஆனால் எடியூரப்பா இன்று காலை 9.30 மணிக்கு முதல்வராக பதவியேற்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருக்கு மெஜாரிட்டியை நிரூபிக்க 15 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது