திங்கள், 6 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 2 மே 2022 (14:36 IST)

காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்ட டீனுக்கு ப. சிதம்பரம் ஆதரவு!

Chidambaram
நேற்று மதுரை மருத்துவக் கல்லூரியில் சமஸ்கிருதத்தில் மாணவர்கள் உறுதிமொழி ஏற்றதற்காக மருத்துவக் கல்லூரியின் டீன் காத்திருப்போர் பட்டியலுக்கு அனுப்பப்பட்ட நிலையில் அவருக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பேசியுள்ளார். இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது:
 
மதுரை மருத்துவக் கல்லூரியில் முதலாண்டு மாணவர்களுக்கான வரவேற்பு நிகழ்ச்சியில் தவறான உறுதிமொழியை மாணவர் தலைவர் வாசித்து அதை மாணவர்கள் ஏற்ற நிகழ்ச்சி கண்டனத்திற்குரியது. இச்சம்பவம் வருத்தம் அளித்தது. மருத்துவக் கல்லூரி டீனுக்குத் தெரிவிக்காமல் மாணவர் பேரவைத் தலைவர் இந்தத் தவறைச் செய்திருக்கிறார் என்று பல மருத்துவர்கள் கூறியிருக்கிறார்கள்.
 
டீன் ரெத்தினவேலு, கரோனா காலத்தில் சிவகங்கை தலைமை மருத்துவமனையில் மிகச் சிறப்பாகப் பணியாற்றினார் என்பதை நானும் சிவகங்கை மாவட்ட மக்களும் அறிவோம். அவருக்குத் தெரியாமல் இந்தப் பிழை நடந்திருந்தால் அவரைப் பொறுப்பாக்கக் கூடாது. ஒரு நல்ல, மூத்த மருத்துவரின் சேவையை மக்கள் இழந்துவிடக்கூடாது என்பதே என் கவலை" என்று பதிவிட்டுள்ளார்.