செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (08:43 IST)

ஒரே நாடு ஒரே அரசியல் கட்சி என்று கொண்டு வந்து விடுவார்கள்: ப. சிதம்பரம்

இன்று ஒரே நாடு ஒரே தேர்தல் என்று பேசும் பாஜகவினர் கடைசியில் ஒரே நாடு ஒரே அரசியல் கட்சி என்றும்,  ஒரே நாடு ஒரே பிரதமர் என்றும் கொண்டு வந்துவிடுவார்கள் என தேர்தல் பிரசாரத்தில் முன்னாள் நிதியமைச்சர் சிதம்பரம் பேசியுள்ளார் 
 
ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது விஷமத்தனம் என்றும் இந்த விஷமத்தனமான பேச்சை அதிமுகவும் ஆதரிப்பது அதிர்ச்சிகரமாக இருக்கிறது என்றும் பாஜகவின் பிரித்தாளும் சூழ்ச்சியை தமிழகத்தில் நடைபெறாது என்றும் ப. சிதம்பரம் தெரிவித்தார் 
 
ஒரே நாடு ஒரே தேர்தல் என்று கூறும் பாஜகவினர் கடைசியில் ஒரே நாடு ஒரே அரசியல் கட்சி என்று கொண்டு வந்து விடுவார்கள் என்றும் அதேபோல் ஒரே நாடு ஒரே பிரதமர் நரேந்திர மோடி என்று கூட வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை என்றும் ஒரே உணவு ஒரே உடை என்பதன் வெளிப்பாடுதான் கர்நாடகாவில் ஹிஜாப் விவகாரம்  என்றும் சிதம்பரம் கூறினார்