கே.எஸ்.அழகிரி அறிக்கைக்கு ப.சிதம்பரம் விளக்கம்!

Last Modified வெள்ளி, 10 ஜனவரி 2020 (21:36 IST)
நடைபெற்று முடிந்த ஊரக உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு உரிய இடங்கள் ஒதுக்கவில்லை என கேஎஸ் அழகிரி இன்று மாலை வெளியிட்ட அறிக்கையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இந்த அறிக்கையால் திமுக-காங்கிரஸ் கூட்டணியே பிளவுபடுமோ என்ற அச்சத்தையும் இரு கட்சிகளிடையே ஏற்படுத்தியது. இந்த நிலையில் கே.எஸ்.அழகிரியின் அறிக்கைக்கு திமுகவின் ஜெ. அன்பழகன் காட்டமான பதில் அளித்ததும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது

இந்த நிலையில் இரு கட்சிகளின் டென்ஷனை குறைக்க இதில் ப சிதம்பரம் அவர்கள் திடீரென தலையிட்டார். அவர் இது குறித்து கூறிய போது காங்கிரஸ் ஆதங்கத்தை வெளிப்படுத்தியதே இந்த அறிக்கை தவிர, மிரட்டல் அல்ல என்றும், உள்ளாட்சியில் காங்கிரஸ் கட்சிக்கான உரிய இடங்களை திமுக வழங்கும் என எதிர்பார்க்கிறோம் என்றும், வரும் 2021 சட்டமன்ற தேர்தலிலும் திமுக காங்கிரஸ் கூட்டணி தொடர வேண்டும் என்பதே எங்கள் விருப்பம் என்றும் தெரிவித்துள்ளார்
ப. சிதம்பரம் அவர்களின் இந்த பாசிட்டிவான கருத்து இரு கட்சிகள் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளை சரி செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது


இதில் மேலும் படிக்கவும் :