வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 17 பிப்ரவரி 2022 (09:38 IST)

நாளையும் பள்ளிகள் விடுமுறை: பள்ளிக்கல்வித்துறை அறிவிப்பு

தமிழகத்தில் பிப்ரவரி 19ஆம் தேதி நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை அடுத்து  அன்றைய தினம் பள்ளி கல்லூரிகள் விடுமுறை என அறிவிக்கப்பட்டது தெரிந்ததே 
 
இந்த நிலையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது. வாக்குப்பதிவு நாளான பிப்ரவரி 19ஆம் தேதி தமிழகத்தில் உள்ள அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை என அறிவித்துள்ள பள்ளிக்கல்வித்துறை தேர்தல் பணிகளில் 50 சதவீதத்திற்கும் மேல் ஆசிரியர்கள் இருப்பதால் நாளையும் அதாவது பிப்ரவரி 18-ஆம் தேதியும் விடுமுறை அளிக்கப்படுகிறது என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது
 
இதனால் தேர்தலை முன்னிட்டு பிப்ரவரி 18 மற்றும் 19 ஆகிய இரண்டு நாட்கள் விடுமுறை என்பது குறிப்பிடத்தக்கது