1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By Senthil Velan
Last Updated : வியாழன், 16 மே 2024 (13:12 IST)

அடுத்த பிரதமராக அமித்ஷாவை கொண்டுவர பிரதமர் மோடி முடிவு.! அரவிந்த் கெஜ்ரிவால்.!!

உள்துறை அமைச்சர் அமித் ஷா எதிர்காலத்தில் பிரதமராக பதவியேற்க பிரதமர் நரேந்திர மோடி திட்டமிட்டு இருப்பதாக டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் தெரிவித்துள்ளார்.
 
டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவால் மற்றும் உத்தரப் பிரதேச முன்னாள் முதல்வரும், சமாஜ்வாதி கட்சித் தலைவருமான அகிலேஷ் யாதவ் ஆகியோர் லக்னோவில் கூட்டாக செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய கேஜ்ரிவால், இண்டியா’ கூட்டணிக்கு வாக்கு கேட்டு உத்தரப் பிரதேசத்துக்கு மந்தளுக்காக தெரிவித்தார். 

4 முக்கிய தலைப்புகளின் கீழ் பேச உள்ளதாகவும் முதலாவது, இந்த தேர்தலில் அமித் ஷாவுக்காக மோடி வாக்கு சேகரிப்பது. இரண்டாவது யோகி ஆதித்யநாத் இன்னும் 2 அல்லது 3 மாதங்களில் பதவியில் இருந்து நீக்கப்படுவார் எனவும் மூன்றாவது, அரசியல் அமைப்பை பாஜக மாற்றி எஸ்சி, எஸ்டி பிரிவுக்கான இடஒதுக்கீட்டை ரத்து செய்ய முயற்சிப்பது, நான்காவது, ஜூன் 4-ஆம் தேதி இண்டியா கூட்டணி ஆட்சிக்கு வருவது குறித்தும் பேச இருப்பதாக தெரிவித்தார்.
 
அடுத்தாண்டு செப்டம்பர் 17-ஆம் தேதியுடன் பிரதமர் மோடிக்கு 75 வயதாகிவிடும் என்றும் அதன்பிறகு அமித் ஷாவை நாட்டின் பிரதமராக்க மோடி முடிவெடுத்துள்ளார் என்றும் கெஜ்ரிவால் தெரிவித்தார்.

 
75 வயதுடன் ஓய்வு பெற மாட்டேன் என்று பிரதமர் இதுவரை சொல்லவில்லை என்றும் பிரதமர் மோடி உருவாக்கிய இந்த விதியை அவரும் பின்பற்றுவார் என்று தனக்கு முழு நம்பிக்கை உள்ளது என்றும் கூறினார். தற்போதைய நிலவரப்படி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 220 இடங்களைத் தாண்டப் போவதில்லை என்று அரவிந்த் கெஜ்ரிவால் தெரிவித்தார்.