1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 22 மே 2022 (08:26 IST)

பெட்ரோல் விலையை 10 ரூபாய் அதிகரித்துவிட்டு ரூ.9.50 குறைப்பதா? ப சிதம்பரம் கேள்வி

chidambaram
பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை 10 ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் 50 காசுகள் குறைப்பா என ப சிதம்பரம் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
மத்திய அரசு நேற்று பெட்ரோல் டீசலுக்கான வாட் வரியை குறைத்த நிலையில் மாநிலங்களுக்கு பங்கு கொடுக்கும் செ|ஸ் வரியை குறைக்காமல், கலால் வரியை மட்டும் குறைத்தது ஏன் என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் 
 
மேலும் பெட்ரோல் டீசலுக்கான விலை கடந்த சில மாதங்களில் பத்து ரூபாய் அதிகரித்து விட்டு ஒன்பது ரூபாய் ஐம்பது காசுகள் குறைப்பு ஏன் என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார் 
 
ஆனால் அதே நேரத்தில் ராஜஸ்தான் கேரள அரசுகள் வாட் வரியை குறைத்த நிலையில் தமிழ்நாடு அரசு வரியை ஏன் குறைக்க வில்லை என்ற கேள்வியை சிதம்பரம் கேட்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது