வியாழன், 9 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Updated : செவ்வாய், 3 டிசம்பர் 2019 (14:17 IST)

சுற்றுச்சுவர் இடிந்த விவகாரம்; வீட்டின் உரிமையாளர் கைது

மேட்டுப்பாளையத்தில் 20 அடி உயர சுற்றுச் சுவர் இடிந்து விழுந்து 17 பேர் உயிரிழந்த விவகாரத்தில் வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியம் கைது செய்யப்பட்டார்.

கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் நடூர் பகுதியில், ஆதி திராவிடர் காலணியில் 20 அடி சுற்றுச்சுவர் இடிந்து 17 பேர் உயிரிழந்தனர். இந்த சுவர் தீண்டாமை சுவர் எனவும் கூறப்படுகிறது. இதனை தொடர்ந்து தலைமறைவான சுற்றுச்சுவர் வீட்டின் சொந்தக்காரர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் வலை வீசி தேடி வந்தனர்.

இந்நிலையில் தனது வீட்டை சுற்றி 20 அடி உயர்த்துக்கு கல்சுவர் கட்டிய வீட்டின் உரிமையாளர் சிவசுப்பிரமணியத்தை போலீஸார் கைது செய்துள்ளனர். மேலும் இச்சம்பவம் குறித்து சிவசுப்பிரமணியத்தை மேட்டுப்பாளையம் காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.