கிலோ 3 ஆயிரத்திற்கு விற்கும் மல்லிகை பூ! – மதுரைக்கு வந்த சோதனை!
தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் மல்லிகை பூவின் விலை அதிகரித்துள்ளது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
மதுரை அருகே உள்ள தொட்டப்பநாயக்கனூர், உசிலம்பட்டி ஆகிய பகுதிகளில் மதுரை மல்லிகை பயிரிடப்பட்டு உள்நாடு மற்றும் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்நிலையில் வடகிழக்கு பருவமழை அதிகரித்துள்ளதால் மல்லிகை விளைச்சலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
இதனால் கிலோ 1000 முதல் 1500 ரூபாய் வரை விற்ற மல்லிகை பூ தற்போது இருமடங்கு விலை அதிகரித்து 3000 ரூபாய் வரை விற்பனையாகி வருகிறது. சபரிமலைக்கு மாலை போடும் இந்த நேரத்தில் மல்லிகை பூவின் விலை அதிகரித்திருப்பது மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.