புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: புதன், 26 ஜூலை 2017 (15:55 IST)

ஓவியாவை கொடுங்கள்...ஜூலியை வைத்துக் கொள்ளுங்கள் - ஓவியா பேரவை அலப்பறை

சமூக வலைத்தளங்களில் ஓவியா ரசிகர்களின் அலப்பறை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது.


 

 
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பல ரசிகர்களின் மனதை கொள்ளையடித்துள்ளார் நடிகை ஓவியா. ஒரு கடினமான சூழ்நிலையை அவர் அணுகும் முறை, எப்போதும் சிரித்துக் கொண்டே இருக்கும் முகம் உள்ளிட்ட பல நடவடிக்கைகள் காரணமாக பலருக்கும் அவரை பிடித்திருக்கிறது. இணையத்தில் அவருக்கு 80 சதவீத ஓட்டுகள் விழுகிறது எனக் கூறப்படுகிறது.
 
சமீபத்தில் அவர் அழுவது போல் வீடியோ வெளியானதும், ஓவியா பேரவை , ஓவியா புரட்சிப்படை, ஓவியா ஆர்மி என உருவாக்கி அவரின் ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பொங்கி எழுந்தனர். அவரை அழ வைத்த காயத்ரி ரகுராம் மற்றும் ஜூலி ஆகியோருக்கு எதிராக மீம்ஸ்களையும் கருத்துகளையும் பதிவு செய்தனர். 


 

 
இந்நிலையில் ஒரு ஓவியா ரசிகர்கள் கேரள முதல்வருக்கு கோரிக்கை விடுவது போல் ஒரு கருத்தை பதிவு செய்துள்ளார். அதில் எங்களுக்கு தண்ணீர் வேண்டாம்.. ஓவியா மட்டும் கொடுங்கள். அதற்கு பதிலாக ஜூலியையும், இலவச இணைப்பாக சினேகனையும் தருகிறோம் என கிண்டலாக குறிப்பிட்டுள்ளார்.