1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 2 ஜனவரி 2020 (18:17 IST)

இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை... நாளையும் தொடரும் ....தேர்தல் ஆணையர் !

தமிழக  ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 91975 பணிகளை நிரப்புவதற்காக கடந்த டிசம்பர் 27 ஆம் தேதி, முதல் கட்ட வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில், 76.19 % வாக்குகள் பதிவானது. அதையடுத்து டிசம்பர் 30 ஆம் தேதி நடைபெற்ற இரண்டம் கட்ட தேர்தலில் உள்ளாட்சி தேர்தலில் 77.73 வாக்குகள் பதிவானது. 
இந்நிலையில், பதிவான வாக்குகள் இன்று பல்வேறு குழப்பங்களுக்கு இடையே  வருகிறது. இந்த நிலையில் சற்றுமுன் வெளியான முன்னிலை நிலவரம் குறித்து தற்போது பார்ப்போம்.
தற்போதைய நிலவரப்படி மாவட்டம் கவுன்சிலருக்கான மொத்தமுள்ள 515 இடங்களில் அதிமுக 154 இடங்களிலும், திமுக 142 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது. அதேபோல் ஒன்றிய கவுன்சிலர் மொத்தமுள்ள 5067 இடங்களில் அதிமுக 586 இடங்களும்,  திமுக 579 இடங்களும் வெற்றி பெற்றுள்ளது.
 
இந்நிலையில்  தேர்தல் ஆணையர் பழனிசாமி, இன்று இரவு முழுவதும் வாக்கு எண்ணிக்கை நடைபெறும் எனவும், நாளையும் வாக்கு எண்ணிக்கை நடைபெறவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.