1. செய்திகள்
  2. செய்திகள்
  3. தேசியச் செய்திகள்
Written By sivalingam
Last Modified: செவ்வாய், 24 செப்டம்பர் 2019 (08:54 IST)

இந்திய தேர்தல் ஆணையரின் மனைவிக்கு வருமான வரித்துறை அனுப்பிய நோட்டீஸ்!

இந்திய தேர்தல் ஆணையர் அசோக் லவாசாவின் மனைவிக்கு வருமான வரித்துறை திடீரென நோட்டீஸ் அனுப்பி உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 

 
இந்திய தேர்தல் ஆணையராக பணிபுரிந்து கொண்டு இருப்பவர் அசோக் லவாசா. இவர் பல தேர்தல் ஆணையராக பணிபுரிவதற்கு முன் பல நிறுவனங்களில் இயக்குனராக பணியாற்றியுள்ளார். அப்போது தனக்கு கிடைத்த வருமானம் மற்றும் அந்நிய செலவாணி குறித்து அவர் தாக்கல் செய்த வருமானவரிக் கணக்கில் முரண்பாடு இருப்பதாகவும் அது குறித்து விளக்கமளிக்க வருமான வரித்துறை முன் ஆஜராக வேண்டும் என்றுவருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பி உள்ளது 
 
 
இது குறித்து கருத்து கூறிய அசோக் லவாசா, ‘எனது ஓய்வூதியம் மற்றும் இதர வருமானங்கள் குறித்த அனைத்து விபரங்களையும் வருமான வரித் துறைக்கு அனுப்பி விட்டேன். ஆகஸ்ட் 5 ஆம் தேதியிலிருந்து தரப்பட்ட வருமான வரித்துறை நோட்டீஸ்களுக்கும் நான் ஏற்கனவே பதிலளித்து விட்டேன். தற்போது நடக்கும் விசாரணைக்கும் முழு ஒத்துழைப்பு அளித்து வருகிறேன் என்று தெரிவித்துள்ளார் 
 
 
இந்த நிலையில் கடந்த மக்களவைத் தேர்தல் நடைபெற்றபோது தேர்தல் தலைமை தேர்தல் ஆணையாளர் சுனில் அரோரா மற்றும் தேர்தல் ஆணையாளர் சுசில் சந்திரா ஆகியோர்களுடன் அசோக் லவாசா கருத்து வேறுபாடு கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தேர்தல் நடத்தை விதி மீறல்கள் குறித்த முடிவுகளில் தன்னுடைய கருத்தை ஏற்கப்படவில்லை என்று பரபரப்பான புகார் கூறியிருந்த அசோக் லவாசா, தேர்தல் ஆணையம் குறித்த கூட்டங்களில் பங்கேற்பது இல்லை என்றும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது