க்ரைம் ரேட்டை கூட்டிக் கொண்டே போகும் ஸ்விக்கி, சொமேட்டோ டெலிவரி பாய்ஸ்!

Last Updated: திங்கள், 3 ஜூன் 2019 (17:56 IST)
ஓவர் ஸ்பீடில் செல்வதால் ஸ்விக்கி, சொமேட்டோ ஆகிய டெலிவரி பாய்ஸ் மீது வழக்கு பாய்ந்துள்ளது. 
 
தற்போதைய காலத்தில் ஆன்லைனில் உணவு ஆர்டர் செய்வது சகஜமாகவும் வழக்கமாகவும் மாறியுள்ளது. சாலையெங்கும் ஸ்விக்க, சொமேட்டோ ஆகிய டி-சர்ட் அணிந்த டெலிவரி பாய்ஸை நிச்சயம் பார்க்க முடியும். 
 
வாடிக்கையாளர்களுக்கு விரைவாக உணவு வழங்க வேண்டும் என்ற காரணத்தால் போக்குவரத்து விதிகளை மீறுகின்றனர் என புகார் எழுந்த வண்ணம் உள்ளது. எனவே, இதற்கு தகுந்த நடவடிக்கையை எடுத்துள்ளனர். 
அதன்படி சென்னையில் கண்காணிப்பின் போது விதிகளை மீறி அதிவேகமாக சென்ற 616 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இதை தவிர மும்பையில் 5,797 பேர் மீது வழக்குப்பதிவு ஆகியுள்ளது. 
 
அதில் 2,315 பேர் ஸ்விக்கி நிறுவனத்தின் ஊழியர்கள், 1,770 பேர் சோமேட்டோ நிறுவன ஊழியர்கள். 946 பேர் டோமினோஸ் பீட்சா நிறுவன ஊழியர்கள். 766 பேர் உபர் ஈட்ஸ் நிறுவன ஊழியர்கள் ஆவார்கள். 


இதில் மேலும் படிக்கவும் :