வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Arun Prasath
Last Modified: திங்கள், 2 டிசம்பர் 2019 (14:18 IST)

ஐந்தருவி No entry; மற்ற அருவிகள் ஓகே; மக்கள் குதூகலம்

குற்றாலத்தில் தண்ணீர் வரத்து ஓரளவு சீராகியுள்ளதால் சுற்றுலா பயணிகளுக்கு அருவிகளில் குளிக்க அனுமதியளிக்கப்பட்டுள்ளது.

சமீக காலமாக தமிழகத்தின் பல இடங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக நெல்லை, தென்காசி ஆகிய பகுதிகளில் அதிகளவிலான கனமழை பெய்து வருகிறது.

இதனால் அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படலாம் என குற்றால அருவிகளில் சுற்றுலா பயணிகள் குளிக்க இரண்டு நாட்கள் அனுமதி அளிக்கப்படவில்லை. இந்நிலையில் இன்று குற்றால் அருவிகளில் குளிக்க சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதனால் மக்கள் மகிழ்ச்சியில் உள்ளனர். எனினும் ஐந்தருவி, பழைய குற்றாலத்தில் குளிக்க இன்னும் அனுமதி வழங்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.