திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Updated : திங்கள், 2 டிசம்பர் 2019 (14:32 IST)

ரஜினி - கமல் - டிடிவி தினகரன் அரசியல் கூட்டணி? கலைக்கட்டும் 2020 தேர்தல்!

நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை தடுக்கும் அதிகாரம் யாருக்கும் இல்லை என அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பேசியுள்ளார். 
 
சமீபத்தில் செய்தியாளர்களுக்கு  பேட்டி அளித்த அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், ஜெயலலிதா மற்றும் கருணாநிதியின் மறைவுக்கு பின்னர் தமிழகத்தில் மிகப்பெரிய வெற்றிடம் இருப்பது உண்மைதா என தெரிவித்தார். 
 
அதோடு, ரஜினி அரசியலுக்கு வருவதை தடுக்கும் அதிகாரம் யாருக்குமே இல்லை. அவர் கட்சி ஆரம்பித்தால் அவருக்கு ஆதரவு கொடுப்பது குறித்து பின்னர் முடிவு செய்வேன். தமிழகத்தில் உள்ள வெற்றிடத்தை நிரப்ப யார் வருவார் என்பதை சட்டமன்ற தேர்தலில் மக்கள் அடையாளம் காட்டுவார்கள் என தெரிவித்துள்ளார். 
ஏற்கனவே, நானும் ரஜினியும் இணைய வேண்டிய அவசியம் ஏற்பட்டால், தமிழக மேம்பாட்டிற்காக சேர்ந்து பயணிப்போம் என கமல் கூறியுள்லார். அதேபோல ரஜினியும், தேவைப்பட்டால் இருவரும் தமிழக மக்களின் நலனுக்காக சேர்ந்து பயணிப்போம் என கூறியுள்ளார்.
 
எனவே இவர்களுடன் சேர்ந்து டிடிவி தினகரனும் பயணிப்பாரா என்பது 2020 ஆம் ஆண்டு வரும் சட்டமன்ற தேர்தலின் போதுதான் தெரிவிந்துக்கொள்ள வேண்டும்.