ஐய்யோ... ஐய்யோ... வடிவேலு வாஷ் அவுட் ஆனது இப்படித்தான்.. தினகரனின் அடடே கதை!
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வடிவேலுவின் திரை வாழக்கையை கெடுத்தது அதிமுகவினர் தான் என பேசியுள்ளார்.
உள்ளாட்சி தேர்தல் இம்மாத இறுதியில் நடைபெற உள்ள நிலையில், சிவகங்கை மாவட்ட தேவகொட்டையில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். இந்த பேட்டியில் திமுக, அதிமுக, தற்போது சொந்த கட்சிக்கு எதிராக திரும்பியுள்ள புகழேந்தி குறித்து பேசியுள்ளார். அவர் பேசியதாவது...
அதிமுக அரசானது நாள், நட்சத்திரம் பார்த்து கொடுக்கும் தேதியில்தான் தேர்தல் ஆணையம் தேர்தல் நடத்தும். முறைபடி தேர்தல் நடக்க வேண்டும் என்ற எண்ணத்தில்தான் திமுக தலைவர் ஸ்டாலின் நீதிமன்றத்தை நாடியுள்ளார். அவருக்கு தேர்தலை நிறுத்தும் எண்ணம் இல்லை.
அதேபோல அதிமுகவினர் இம்சை அரசர்கள் மாதிரி நகைச்சுவை பேச்சை ஊடங்களில் வழங்கி வருகின்றனர். இவர்களாளேயே காமெடி நடிகர் வடிவேலு படங்களில் நடிப்பதில்லை. அதேபோல புகழேந்தி பணம் வாங்கிக்கொண்டு இவ்வாறு அமமுகவுக்கு எதிராக சதி செய்து வருகிறார் என பேசியுள்ளார்.