1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வெள்ளி, 9 அக்டோபர் 2020 (16:00 IST)

கல்யாண வீட்டுக்கு சாப்பிட வந்தவர் அடுப்பை இடித்தது போல் இருக்கிறது: ஓஎஸ் மணியன்!

அதிமுக மட்டுமின்றி திமுகவுடனும் கூட்டணி சேர வாய்ப்புள்ளது என முன்னாள் மத்திய அமைச்சரும் பாஜக பிரபலமுமான பொன் ராதாகிருஷ்ணன் அவர்கள் பேட்டி ஒன்றில் கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது என்பது தெரிந்ததே
 
அதிமுக கூட்டணியில் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் இருந்த பாஜக தற்போது வரை அதே கூட்டணியில் தான் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் திடீரென முன்னாள் மத்திய அமைச்சர் பொன் ராதாகிருஷ்ணன், திமுகவுடனும் கூட்டணிக்கு வாய்ப்பு இருக்கிறது என்று கூறியுள்ளார். திமுகவும் இதற்கு எந்தவித மறுப்பும் தெரிவிக்காமல் இருப்பது அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியது 
 
இந்த நிலையில் பொன் ராதாகிருஷ்ணன் கூறிய இந்த கருத்து குறித்து அமைச்சர் எஸ் மணியன் அவர்கள் கூறியபோது, ‘திமுகவுடன் கூட்டணிக்கு வாய்ப்பு என பொன் ராதாகிருஷ்ணன் கூறியது கல்யாண வீட்டில் சாப்பிட வந்தவர் அடுப்பை இடித்து விட்டு செல்வது போல் உள்ளது என்று விமர்சனம் செய்துள்ளார்
 
அமைச்சர் ஓஎஸ் மணியன் அவர்களின் இந்த விமர்சனம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது