எம்பிஏ நுழைவுத்தேர்வில் அதிக மதிப்பெண்.. மோசடியில் ஈடுபட்ட 3 பேர் கைது..!
என்ஜினீயரிங், எம்.பி.ஏ., எம்.சி.ஏ., சட்டம், பி.எட் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் சேர நுழைவுத்தேர்வு நடத்தப்படுகிறது. இந்த ஆண்டு அந்த தேர்வு அடுத்த மாதம் ஆரம்பம் ஆக உள்ளது.
இந்நிலையில், எம்.பி.ஏ. நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்திருந்த சில மாணவர்களை அண்மையில் ஒரு குழு தொடர்பு கொண்டு பேசியது. தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற உதவுவதாகவும், பிரபல கல்லூரிகளில் சீட்டு உறுதி செய்து தருவதாகவும் கூறி அவர்கள் ரூ.10 லட்சம் முதல் ரூ.20 லட்சம் வரை கோரினர்.
இந்த மோசடியை சந்தேகித்த சில மாணவர்கள், தேர்வுக்காக அமைக்கப்பட்ட உதவி மையத்தை தொடர்பு கொண்டு புகார் அளித்தனர். பின்னர் இது குறித்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.
விசாரணையின் போது, டெல்லியை சேர்ந்த ஒரு குழு, நுழைவுத்தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் விவரங்களை திருடி, அதைப் பயன்படுத்தி கல்லூரிகளில் சீட் வாங்கித் தருவதாகக் கூறி மோசடியில் ஈடுபட முயன்றது தெரியவந்தது.
இதனை தொடர்ந்து, போலீசார் நடவடிக்கை எடுத்து, டெல்லியைச் சேர்ந்த அபிஷேக் ஸ்ரீவட்சாவ், சேத்தன் குமார், அம்பிரிஷ் குமார் ஆகியோரை கைது செய்தனர்.
Edited by Siva