செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj kiyan
Last Modified: வியாழன், 23 ஜனவரி 2020 (14:01 IST)

ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உத்தரவு !

பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலர் ஹெச்.ராஜா மீது குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2018 ஆம் ஆண்டு, புதுக்கோட்டை மாவட்டம் திருமயத்தில் நடைபெற்ற விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தின் போது, காவல்துறை மற்றும் நீதிமன்றத்தை ஹெச்.ராஜா கடுமையான முறையில் விமர்சித்து பேசினார்.
 
இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது. பல்வேறு தரப்பினரும் ஹெச்.ராஜாவின் பேச்சுக்கு கடுமையான கண்டனங்களை தெரிவித்தனர். அத்துடன், பாஜகவின் தேசிய செயலர் என்பதால்தான் ஹெச்.ராஜாவுக்கு எதிரான வழக்கை விசாரிக்க காவல்துறை தயக்கம் காட்டி வருவதாக நீதிமன்ற வழக்கறிஞர் கூறியிருந்தார்.
 
இதுசம்பந்தமான வழக்கு நீதிபதி ஜெகதீஸ் சந்திரா முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, அவர், ஹெச்.ராஜாவுக்கு எதிராக குற்றப்பத்திரிக்கையை  2 மாதத்தில் தாக்கல் செய்ய வேண்டுமென திருமயம் காவல் ஆய்வாளருக்கு உத்தரவிட்டுள்ளார்.