1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
  4. Orange alert to tamil nadu tomorrow

தமிழ்நாடு முழுவதும் ஆரஞ்ச் அலர்ட்.. இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை..!

தமிழ்நாடு
தமிழ்நாடு முழுவதற்கும் நாளை ஆரஞ்சு அலர்ட் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. 
 
தமிழ்நாடு உள்பட தென் மாநிலங்களில் வடகிழக்கு பருவமழை தொடங்கியுள்ளதை அடுத்து மிதமான மழை முதல் கன மழை வரை பரவலாக பெய்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்.
 
 இந்த நிலையில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் தமிழ்நாட்டிற்கு ஆரஞ்ச் அலர்ட் விடுத்து இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. தமிழ்நாட்டில் உள்ள மாவட்ட நிர்வாகிகள் உரிய முன்னேற்பாடுகளை செய்வதற்காக ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது என்றும் தமிழ்நாட்டில் நவம்பர் 6ஆம் தேதி வரை கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாகவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 
 
எனவே பொதுமக்கள் நாளை தகுந்த முன்னேற்பாடுகளுடன் வெளியே செல்ல அறிவுத்தப்படுகின்றனர். அதேபோல் தாழ்வான பகுதியில் இருப்பவர்கள் முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்படுகிறது.
 
Edited by Mahendran
அடுத்த கட்டுரையில்
திருப்பூரில் தொழிலதிபர் வீட்டை உடைத்து கொள்ளை! – வடமாநில தொழிலாளர்கள் கைது!