செவ்வாய், 24 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : புதன், 15 ஜூன் 2022 (21:45 IST)

அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படுகிறாரா? அதிர்ச்சி தகவல்

ops
அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என கடந்த சில மாதங்களாக தொண்டர்கள் வலியுறுத்தி வரும் நிலையில் இது குறித்த சர்ச்சை தற்போது தீவிரமாகியுள்ளது. 
அதிமுகவின் ஒற்றை தலைமைக்கு ஓபிஎஸ் தேர்வு செய்யப்பட்ட அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுவதால் ஈபிஎஸ் ஆதரவாளர்கள் ரகசிய ஆலோசனை செய்து வருவதாக கூறப்படுகிறது 
 
இந்த நிலையில் அதிமுகவில் இருந்து ஓபிஎஸ் நீக்கப்படலாம் என்று ஒரு வதந்தி அதிமுக வட்டாரத்தில் பரவி வருவதால் அதிமுக தொண்டர்கள் மத்தியில் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது
 
ஒருவேளை அதிமுகவிலிருந்து ஓபிஎஸ் நீக்கப்பட்டால் அதிமுக இரண்டாக உடையும் அபாயம் இருப்பதாகவும் அதிமுக தொண்டர்கள் கவலை தெரிவித்துவருகின்றனர் 
 
ஓபிஎஸ் அதிமுகவில் இருந்து நீக்கப்படுவாரா அல்லது வெறும் வதந்தியா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.