எதிர்க்கட்சி தலைவரான ஈபிஎஸ், கடுப்பில் கிளம்பிய ஓபிஎஸ்!!

Sugapriya Prakash| Last Modified திங்கள், 10 மே 2021 (13:31 IST)
சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியாக இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 

 
தமிழக சட்டமன்ற தேர்தலில் திமுக தனிப்பெரும்பான்மை பெற்ற நிலையில் மு.க.ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டுள்ளார். இந்நிலையில் 65 இடங்களில் வெற்றிபெற்றுள்ள அதிமுக சட்டமன்றத்தில் எதிர்கட்சியாக இடம்பெற்றுள்ளது. இந்நிலையில் அதிமுக சார்பில் எதிர்கட்சி தலைவராக யாரை நியமிப்பது என்பதில் ஈபிஎஸ் – ஓபிஎஸ் ஆதரவாளர்கள் இடையே வாக்குவாதம் எழுந்துள்ளது.
 
இதனால் முன்னதாக கூட்டப்பட்ட எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில் தீர்வு எட்டாத நிலையில் இன்று மீண்டும் எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழக சட்டப்பேரவை எதிர்கட்சி தலைவராக அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
 
இதனிடையே சட்டமன்ற எதிர்க்கட்சி தவைராக எடப்பாடி பழனிசாமி தேர்வான நிலையில் ஓ.பன்னீர்செல்வம் அதிருப்தியாக இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. அதிமுக எம்.எல்.ஏ கூட்டம் நிறைவடைந்த பின் ஓ.பன்னீர்செல்வம் எந்தவித கருத்தும் தெரிவிக்காமல் கோபமாக  அவர் புறப்பட்டு சென்றதாக கூறப்படுகிறது. 


இதில் மேலும் படிக்கவும் :