1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : சனி, 8 மே 2021 (12:37 IST)

கட்சிக்குள்ளே கலவரம்... இரு அணிகளாக பிரிந்து கோஷம் போடும் இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள்!

நடந்து முடிந்த தேர்தலில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக தோல்வியை தழுவி எதிர்கட்சியாகியுள்ளது. இதனையடுத்து  எதிர்க்கட்சித் தலைவராக யாரை நியமிக்கலாம் என்பதை முடிவெடுக்க அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நேற்று நடைபெற்றது.
 
இந்த கூட்டத்தில் கட்சியினர்களே  இபிஎஸ், ஓபிஎஸ் ஆதரவாளர்கள் என இரு அணியினராக பிரிந்து கட்சி தலைவராக யாரை நியமிக்கலாம் என்பதை கோஷமிட்டு மெஜாரிட்டியை காட்ட ஆரம்பித்தனர். அக்கூட்டத்தில் தேர்தல் தோல்விக்கு முழு காரணம் எடப்பாடி தான் ஓபிஎஸ் குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. 
 
அப்போது இருவருக்குள்ளேயும் மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து இருவரது ஆதரவாளர்களும் மாற்றி மாற்றி கோஷம் எழுப்பினார்கள். இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வெளியாகி வைரலாகி வருகிறது.